April 29, 2025 10:44:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பலி

பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலிற்கு இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் 8 பாகிஸ்தான் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஸ்மீரில் பாரமுல்லா பகுதியில் இந்திய இராணுவத்தினரின் நிலைகளை இலக்குவைத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர்.இந்த தாக்குதல் காரணமாக மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, இந்திய அதிகாரிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக 8 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பாகிஸ்தானின் விசேட படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.