July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீபாவளிக்கு சரவெடியாக மாஸ்டர் டீசர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப் போனது.

தற்போது தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் விரைவில் மாஸ்டர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 மாலை 6 மணிக்கு யூடியூப் மற்றும் சன் டிவியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இதனை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

லேட்டா வந்தாலும் வாத்தியார் லேட்டஸ்ட்டா வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே தீபாவளி சரவெடியாக மாஸ்டர் டீசர் வெளியாகிறது.

கடந்த ஃபிப்ரவரி காதலர் தினம் அன்று குட்டி ஸ்டோரி பாட்டு ரிலீசாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது .

மாஸ்டர் படத்திற்கு மத்திய திரைப்பட சென்சார் வாரியம் யு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆகவே பெற்றோர்களின் வழிகாட்டுதலின்படி குழந்தைகள் இந்த படத்தை பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் திரைப்படம் சீக்கிரமே வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.