November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிறநாடுகளின் இறைமையை உலகநாடுகள் மதிக்கவேண்டும்; ஷாங்காய் உச்சி மாநாட்டு உரையில் இந்திய பிரதமர்

பிறநாடுகளின் இறைமையை உலக நாடுகள் மதிக்கவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணொளி மூலம் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டு உரையின்போதே இந்திய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இந்திய பிரதமர்;

ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க வேண்டும்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

ஆனால் சில உறுப்பு நாடுகள் (பாகிஸ்தான்) தேவையின்றி இருதரப்பு பிரச்சினைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டுவர மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றன. இது இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும் வினியோகம் செய்வதிலும் இந்தியா ஈடுபடும். இந்த கொரோனா காலத்தில் 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.