கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தி அதில் வெற்றியும் பெற்று உலகத்திற்கு இந்தியா தன்னுடைய சக்தியை காட்டி உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி எனவும் ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்
பீகாரில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இங்கு மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி;
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்ய வேண்டுமெனவும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு தேர்தலின்போது வாக்குகள் சரிந்து உள்ளது.
வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்லும் தீர்மானத்தை இந்தத் தேர்தலில் மக்கள் எடுத்துள்ளார்கள்.
ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு அறைகளுடன் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது தேசம் முழுவதும் விரிந்து ஒவ்வொருவரின் இதயத்தையும் பாஜக வென்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.