இந்தியாவின் பீகார் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கும் எதிர்கட்சி கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது .
பீகாரில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 123 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள அதேவேளை, எம்ஜிபி கூட்டணி 112 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மூன்று கட்டங்களாக வாக்குபதிவுகள் பீகாரில் இடம்பெற்ற நிலையில் எதிர்கட்சி கூட்டணியே அதிக ஆசனங்களை பெறும் என தேர்தலிற்கு முன்னரான கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அதற்கு மாறாக பாஜக கூட்டணி முன்னிலையில் காணப்படுகின்றது.
இதேவேளை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள அதேவேளை, தேர்தல் ஆணையகம் இதனை நிராகரித்துள்ளது.