May 16, 2025 23:59:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுக்கொடுங்கள்; இந்திய பிரதமருக்கு வைகோ கடிதம்

இலங்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களிடமிருந்து மீட்கப்பட்ட படகுகள் அழிக்கப்படவுள்ளன என வெளியாகியுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து வைகோ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த 88 மீனவர்களின் 100 படகுகள் அழிக்கப்படவுள்ளன என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கின்றது என வைகோ இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படகுகளை மீட்பது தொடர்பிலோ அல்லது மீனவர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பிலோ இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.