April 30, 2025 23:48:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளியே வந்துள்ள பேரறிவாளன் மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; தாயார் அற்புதம்மாள்

நன்னம்பிக்கை உறுதிமொழியின் கீழ் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளன் மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.சிறையிலிருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள்;

மகனின் விடுதலைக்காக கடந்த பல வருடங்களாக போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட மன உளைச்சலை விட தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன்.

இறுதிக்காலத்தை மகனுடனேயே செலவிட விரும்புகிறேன்.
இதன் காரணமாக மகன் பேரறிவாளன் மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.மகனின் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.