January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்திய-அமெரிக்க உறவில் பைடனின் பங்கு அளப்பரியது”: டுவிட்டரில் மோடி

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை உலக நாடுகள் பலவும் உன்னிப்பாக அவதானித்தன.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் உடனடியாக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களிடமிருந்து உடனடியான கருத்துக்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

இதனிடையே, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் உள்ள ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களின் கருத்துக்களும் இன்னும் வெளியாகவில்லை.

உலகத் தலைவர்கள் சிலரது டுவிட்டர் குறிப்புகள்:

“அமெரிக்கா எமது மிகவும் முக்கியமான நேச நாடு. இருநாடுகளுக்கும் பொதுவான முன்னுரிமைக்குரிய விடயங்கள், பருவநிலை மாற்றம், வணிகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்”: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன்

“அமெரிக்கர்கள் அவர்களின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்…இன்றைய சவால்களை வெற்றிகொள்ள நாம் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. இணைந்து பணியாற்றுவோம்”: பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்.

“எமது இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகள்..உலக அரங்கில் நமது உறவு தனித்துவமானது.. தொடர்ந்தும் அதைப் பலப்படுத்த காத்திருக்கிறேன்”: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

“வாழ்த்துக்கள் ஜோ பைடன்.. நீங்கள் துணை ஜனாதிபதியாக இருந்தபோது இந்திய- அமெரிக்க உறவுகளை பலப்படுத்துவதில் உங்களின் பங்கு அளப்பரியது. இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் பலப்படுத்த உங்களுடன் மீண்டும் பணியாற்ற காத்திருக்கிறேன்’: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

“வரி ஏய்ப்பு வழிகளையும்,  தேசத்தின் சொத்துக்களை திருடும் ஊழல்-தலைமைளையும் ஒழிப்பதில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். ஆப்கானிஸ்தானிலும் பிராந்தியத்திலும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவோம்” : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

https://twitter.com/AngelaMerkeICDU/status/1325194816716615683