October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடியுரிமை சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்; இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

கொரோனா அச்சம் முழுமையாக நிறைவடைந்த கையோடு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான் ,வங்கதேசம் ,நேபாளம், பூட்டான், பர்மா ,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்கள்.இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என பலதரப்பட்ட மதங்களைச் சார்ந்த மக்களும் இருக்கிறார்கள்.

அகதிகளாக இருக்கும் இவர்கள் இந்தியாவில் குடியேற ஏற்கனவே ஒழுங்கான சட்டதிட்டங்கள் இருக்கின்ற நிலையில், தற்போது உள்ள அரசாங்கம் அந்தக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தது.

இதன்படி மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பதால் இதை எதிர்த்து நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன .அந்த நேரத்தில் கொரோனா அச்சம் நாடும் முழுவதும் பரவியதால் போராட்டம் நடத்திய கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை கைவிட்டன .

இந்நிலையில், மேற்குவங்கம் சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று தனது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.