February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீபாவளிக்கு வெளியாகும் ஈஸ்வரன் டீசர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நீண்ட இடைவெளியின் பின்னர் சிம்பு நடிக்கும் திரைப்படம் தான் ஈஸ்வரன்.

படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் , டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையில் 30 கிலோ வரை குறைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார் என்பது தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக அடிபடுகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த வருடம் பொங்கலுக்கு ஈஸ்வரன் விருந்து படைக்கும் என சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிம்பு பாம்பை கழுத்தில் பிடித்து வைத்திருக்கும் போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது நிஜப் பாம்பா அல்லது பொம்மையா என வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் குழம்பிப் போயுள்ளனர்.