photo: India in USA (Embassy of India, Washington DC)
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இந்திய- அமெரிக்க உறவுகளை பாதிக்காது என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“இரண்டு நாடுகளினதும் உறவுகள் உறுதியான அத்திவாரத்தில் உருவாக்கப்பட்டவை. ஜனநாயக கட்சியினதும் குடியரசுக்கட்சியினதும் ஆதரவு இந்த உறவுகளுக்கு உண்டு” என இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஒருவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
“உங்களைப் போல நாங்களும் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றோம். இரு நாடுகள் மத்தியிலான உறவுகள் சாத்தியமான அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன. மூலோபாயம் முதல் பாதுகாப்பு, முதலீடு, வர்த்தகம், மக்களுக்கு இடையிலான உறவுகள் என அனைத்து விடயங்களிலும் இந்த உறவுகள் காணப்படுகின்றன.
இந்தியா- அமெரிக்கா இடையிலான முழுமையான மூலோபாய உறவுகளுக்கு அமெரிக்காவின் இரு கட்சிகளினதும் ஆதரவுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதிகளும் நிர்வாகங்களும் இந்த உறவை மேலும் உயர்மட்டத்திற்கு உயர்த்தியுள்ளனர்” எனவும் இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.