January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழக ஆளுநருக்கு தெரியும்’

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழக ஆளுநருக்கு தெரியும் என கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகின்றது.தமிழக அமைச்சரவை முன்னரே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது.எங்களுக்கு மறுப்பில்லை என காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகின்றது.இந்நிலையில் இந்த விடுதலைக்கு தடை யார் என்பது ஆளுநருக்கே தெரியும் என வைரமுத்து அதில் பதிவிட்டுள்ளார்.