எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சிக்கு எனது பெயரையோ புகைப்படத்தையோ உபயோகித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்தரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
மேலும் இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் பரபரப்பாக ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து நடிகர் விஜய் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ” என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.
அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை: