January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆடிக்குத்து’ பாடலை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த இசைப்புயல்

ஆடிக்குத்து

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இந்தப்படம் தீபாவளி தினத்தில் இணையதளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. படத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ட்ரெய்லரைத் தொடர்ந்து பாடல்களை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக “ஆடிக்குத்து” என்கிற பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதைத் தமிழ்த் திரையுலகின் மூத்த பாடகிகளில் ஒருவரான எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்தார்.

 

80 வயதிலும் எல்.ஆர்.ஈஸ்வரி அந்த பாடலில் தோன்றி உற்சாகமாகப் பாடியது குறித்து பலர் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

தற்போது 17 இலட்சம் பார்வைகளையும் தாண்டி இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில், பாடலைப் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா மீண்டும் திரைக்கு முன் பாடுவது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது… வணங்குகிறேன்” என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.