January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.

80 வயதான டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சனிக்கிழமை இரவு காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

குணச்சித்திர வேடம், வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.