January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார்!

திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

செரிமானம் பிரச்சனை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும்வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக தகவல் வெளியானது. 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதிநவீன ஆஞ்சியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே ரஜினிகாந்த் இரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகின்றது.

இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் நடிகர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.