October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அமெரிக்க தேர்தல் முடிவு இந்திய- அமெரிக்க உறவுகளை பாதிக்காது”

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காரணமாக இந்திய -அமெரிக்க உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வி சிங்லா தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கிழக்கு எல்லையில் காணப்படும் நிலையை சீனா ஒரு தலைப்பட்சமாக மாற்றியமைக்க முயன்றுள்ளதால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
லடாக் எல்லையில் காணப்படும் நிலையை சீனா ஒருதலைப்பட்சமாக மாற்ற முயன்றுள்ளது.
இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாடு குறித்து இந்தியா உறுதியாகவுள்ளது.

இந்திய- சீனா எல்லை குறித்து பொதுவான ஒரு கருத்து இல்லை.ஆனால் தற்போது படையினர் நிலை கொண்டுள்ள பகுதியை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டால் அது இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை பெருமளவிற்கு பாதிக்கும்.

லடாக் எல்லையில் சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது.
எல்லைக்கோட்டு பகுதியில் ஒரு தலைப்பட்சமாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் இரு நாடுகள் மத்தியிலான உறவுகளிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய -அமெரிக்க உறவுகள் இருதரப்பு ஆதரவை அடிப்படையாக கொண்டவை .அமெரிக்க தேர்தல் முடிவுகள் இந்திய -அமெரிக்க உறவுகளில் தாக்கம் செலுத்தாது.

இரு நாடுகளும் மிக நீண்டகாலமாக நீடிக்கும் உறவை ஏற்படுத்தியுள்ளன. இந்த உறவு பரந்துபட்டது எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.