January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்நீச்சல் தொடர் நடிகர் மாரிமுத்து காலமானார்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார்.

வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி தனது 57ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை கிராமத்தைச் சேர்ந்த இவர், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், எதிர்நீச்சல் தொடர்மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.