January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா-எல்1’ விண்ணில் பாய்ந்தது!

சூரியனை ஆய்வு செய்ய ”ஆதித்யா-எல்1″ விண்கலத்தை இந்தியா, வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று முற்பகல் 11:50 மணி அளவில் இஸ்ரோ விண்கலத்தை விண்ணில் ஏவியது.

இந்த விண்கலம் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ஓரிடத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

குறித்த இலக்கை அடைய 109 நாட்கள் ஆகும்,

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் சூரிய செயல்பாட்டின் நீண்ட தூர ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கருவிகள் உள்ளன. இதன் பணி 6 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரனின் தென் துருவப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த வாரம் பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது சூரியனை ஆய்வு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.