கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக ஒப்பந்தத்தில் மாத்திரமே உள்ளதே தவிர, அதற்கான சட்டங்கள் எதுவும் இல்லை என்றும், இதனால் அந்தத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டிலேயே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளதென்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வாக அமையும் என்றும், இதன்படி அது இந்தியாவுக்கு சொந்தமானது என்பதனை உறுதிப்படுத்த ஆதாரங்களை திரட்டி அதனை மீட்க நடவடிக்கை எடுப்போம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.