January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

261 பேரை பலியெடுத்த பாலசோர் ரயில் விபத்து எப்படி நடந்தது?

Photo: Social Media

இந்தியாவின் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே நேரிட்ட கோர ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அந்த மார்க்கத்தில் சென்னை – ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்டஅனைத்து ரயில்கள்ளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் 261 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 650 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.. அதன்படி, காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே சரக்கு ரெயில் ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது.

அப்போது, சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மின்னல் வேகத்தில் மோதியது.

இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளுன் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் மொத்தம் 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ரெயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவடையும் போது தான் 3 ரெயில்கள் விபத்துக்கான முழுமையான காரணம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.