இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது தான் பயணித்த கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு 108 ஆம்பியயூலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் முதுகுப்பகுதியிலும், தலைப்பகுதியிலும் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
25 வயதாகும் ரிஷப் பண்ட், தற்போது இந்திய அணியில் மிக முக்கிய நட்சந்த்திர வீரராவார். அடுத்தடுத்து இந்திய அணி பல்வேறு தொடர்கள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு விபத்து ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.