இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் 30 வருடங்களின் பின்னர் உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யுமாறு நளினி, ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதன்படி குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட போது, 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.