டி-20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
அரையிறுதி போட்டியின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி 50 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களை பெற்ற, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக எலக்ஸ் ஹேலிஸ் ஆட்டம் இழக்காது 86 ஓட்டங்களையும் ஜோஸ் பட்டர் ஆட்டம் இழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணி, 13 ஆம் திகதி பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.