January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொங்கு பாலம் உடை விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவின் குஜராத்தில் மோர்பி மாவட்டம் மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் உடை விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் பெருமளவான மக்கள் பயணித்த போது அந்த பாலம் திடீரென பாலம் உடைந்து ஆற்றுக்குள் விழுந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாலத்தை பழுதுபார்க்கும் பணிகள் கடந்த 26 ஆம் திகதி நிறைவுக்கு வந்து அது மக்கள் பாவனைக்கான மீண்டும் திறக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நடந்துள்ளது.

பாலம் உடைந்து ஆற்றுக்குள் விழும் போது, அதில் சிறுவர்கள் பலரும் சிக்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும், இதன்போது நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இதுவரையில் 140 வரையிலானோர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக குஜராத் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உயிருடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.