இந்தியா மற்றும் இலங்கைக்கு கடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் 200 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப் பொருளின் பெறுமதி சுமார் 1200 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது போதைப் பொருள் மீட்கப்பட்ட ஈரான் மீன்பிடி கப்பலில் இருந்த 6 ஈரான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெரோயின் தொகை ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்தே ஈரான் மீன்பிடிக் கப்பலுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் அவை இந்தியா மற்றும் இலங்கைக்கு அனுப்புவதற்காக குறித்த மீன்பிடி படகில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் புகாத வண்ணம் அவை பொதியிடப்பட்டிருந்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை படகிற்கு அவற்றை ஏற்றுவதற்காக இந்து சமுத்திரத்தில் குறித்த ஈரான் மீன்பிடிக் கப்பல் பயணித்துள்ளதுடன், இதன்போதே இந்திய கடற்படையினரால் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Coordinated ops at sea.@narcoticsbureau #NCB & #IndianNavy apprehended a suspicious vessel carrying more than 200 kgs of narcotics.
Boat with crew, escorted to #Kochi for further investigation.
Details⬇️ https://t.co/GMTqZvvU3d@DefenceMinIndia @HMOIndia@SpokespersonMoD pic.twitter.com/0gHxjTWPYg— SpokespersonNavy (@indiannavy) October 7, 2022