file photo: Facebook/ India in Sri Lanka
இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தில் பணியாற்றும் ஊழியரொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர் கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பது நேற்று உறுதியானதாக இந்திய தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச மருத்துவமனையொன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட்- 19 பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சில வாரங்களாக இந்திய தூதுவராலயத்தின் செயற்பாடுகள் வரையறைகளுடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.