January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் அவர் நேற்றைய தினம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ள மனோஜ், உடல்நலக் குறைவால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளஅப்பாவின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது என்றும் சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.