
பிரபல நடிகை திரிஷா, அரசியலில் இணைவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது 39வது வயதில் திரிஷா தனது அரசியல் வாழ்க்கையை தொடங்க விரும்புவதாகவும், அவர் கூடிய விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘மௌனம் பேசியதே’ மூலம் தமிழ் சினிமாவுக்குள் திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.
படப்பிடிப்பில் எப்போதும் பிஸியாக இருக்கும் திரிஷா, தற்போது அரசியலில் அரசியலில் நுழையப் போகிறார் என்று வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அரசியலில் நுழைவது தொடர்பில் திரிஷா தரப்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை.