February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடிஇன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடியை  பிரதமர் ஏற்றிவைத்தார்.

டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சுதந்திர தின விழா நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.