File Photo
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பேரறிவாளனுக்கு விடுதலை கோரும் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, அவரை ரஜீவ் காந்தி கொலை வழங்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது.
சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதேவேளை, ஆளுநர் முடிவு எடுக்காமல் இந்த விடயத்தில் தாமத்தப்படுதியது தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிகிச்சைகளுக்கு இடமளிக்கும் வகையில் 2021 மே மாதம் முதல் பாரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது.