April 14, 2025 4:23:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி!

தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவின் போது, மின்சாரக் கம்பியில் தேர் மோதியதால் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பர் குருபூஜைக்கான களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிவு ஆரம்பமானது.

தேர் பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டு செல்லப்பட்ட போது, தெருவொன்றில் உயர் அழுத்த மின்சார கம்பியில் தேர் மோதியுள்ளது.

இதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதன்போது 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

இதேவேளை தமிழக அரசாங்கமும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் நிவரான உதவிகளை அறிவித்துள்ளது.