April 14, 2025 19:57:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கைதான மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேஸ்வரத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்களும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கைதான மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.