April 10, 2025 19:44:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீடு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட்டு வைத்தார்.

கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட்டார்.

இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.