January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராட்டத்திற்கு தயாராகும் இராமேஸ்வரம் மீனவர்கள்!

Fishery Boats Common Image

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தங்கச்சி மடம் பகுதியில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினை குறித்து திங்கட்கிழமை தங்கச்சிமடம் சூசையப்பர் கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட அவசர ஆலோசனை கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை முதல் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.