February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீனவப் படகுகள் ஏலம்: தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவப் படகுகளை ஏலத்தில் விடும் நடவடிக்கை நேற்று முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கை, கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது எனவும் இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.