January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இசை உலகிற்கு ஏற்பட்ட இழப்பு”: லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பலரும் இரங்கல்!

இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ”திரைப்படங்களுக்கு அப்பால் லதா மங்கேஷ்கர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்

தவர்” என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கருடன் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு இந்திய பிரதமர் இரங்கள் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “லதா தீதியின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய திரைப்பட துறையில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் நெருக்கமாகக் கவனித்துள்ளார்.

திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். மேலும் எப்போதும் வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவைப் பார்க்க விரும்பினார்”, என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இசைப் பிரபலங்களும் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.