January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் ரூபாய்!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்த வருடம் முதல் இந்தியாவுக்கென தனியாக டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிடும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்ட உரையில் அறிவித்திருக்கிறார்.

இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்றும், மலிவான நாணய மேலாண்மைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் ரூபாயை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

“டிஜிட்டல் ரூபாய் என்பது நமது தாள் வடிவிலான ரூபாயின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும். அத்துடன் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். இது டிஜிட்டல் கரன்சியுடன் தற்போதுள்ள கரன்சியை பரிமாற்றம் செய்யும் ஒரு அமைப்பாகவும் இருக்கும். எவராவது டிஜிட்டல் ரூபாயில் செலுத்தினால், அதை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.