January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் அணிவகுப்பு

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசாங்கத்தினால் டெல்லியில் நடத்தப்பட்ட விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்திகள், சென்னையில் நடைபெற்ற அணிவகுப்பில் இணைக்கப்பட்டன.

டெல்லி, ராஜபாதையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் தமிழகத்தின் நான்கு ஊர்த்திகள் சில காரணங்களுக்காக அணிவகுப்பில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தமிழக அரசின் குடியரசு விழா அணி வகுப்பில் அந்த ஊர்திகள் பயன்படுத்தப்பட்டன.

அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

அரசு இசைக்கல்லூரி மாணவ-மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்திகள் பயணித்தன.

இதேவேளை இந்த நிகழ்வில் தமிழகத்தில் வீரதீர செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார்.