June 15, 2025 1:28:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர், சிகிச்சை பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

92 வயதான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லதா மங்கேஷ்கர், தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.