இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றார்.
இந்தியாவில் ஒவ்வொருவரினதும் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு அடிப்படையில் கோடீஸ்வரர்கள் பட்டியல் ஒவ்வெரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது.
இதற்கமைய, 2020 ஆம் ஆண்டின் கோடீஸ்வரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ‘ரிலையன்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வரும் முகேஷ் அம்பானி தற்போதும் அந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
குறித்த பட்டியலுக்கமைய 2020 ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 104.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2019 ஆம் ஆண்டை விடவும், அவரது சொத்து மதிப்பு 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி இரண்டாமிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 82.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அத்துடன் ‘விப்ரோ’ நிறுவனர் அமீம் பிரேம்ஜி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்