
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள முதல்வா், மீனவர்களின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டிய குற்றச்சாட்டில் யாழப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் நேற்று அதிகாலை 6 படகுகளுடன் 43 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மீனவர்கள் கைது கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே தமிழக முதல்வர், மீனவர்களின் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.