January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக அழகி போட்டியில் பங்கேற்ற இந்திய அழகி உட்பட 16 அழகிகளுக்கு கொரோனா

2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப் போட்டி அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்று வந்தது.
இதில் கலந்து கொண்ட மிஸ் இந்தியா உட்பட 16 அழகிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இறுதிப் போட்டி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உலக அழகி போட்டியில், மிஸ் இந்தியாவாக தேர்வாகிய மானசா வாரணாசியும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 அழகிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைத்து அழகிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குணம் அடைந்த பின்னர், 90 நாட்களுக்குள் மீண்டும் இறுதிப் போட்டி நடத்தப்படும் என உலக அழகி போட்டிக்கான அமைப்பு அறிவித்துள்ளது.