November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்று

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதில் அதிகளவாக ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் 32 பேருக்கு ஒமிக்ரோன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தலைநகர் டெல்லியில் 22 பேருக்கும் இந்த ஒமிக்ரோன் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 பேர், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத்தில் தலா 8 பேர், ஆந்திர மாநிலம், சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசங்கள் உட்பட இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமைக்ரோன் தொற்று பதிவாகியுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரோன் தொற்று உறுதியானது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமிக்ரோன் தொற்று தென் ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் 77 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது.

தற்போது இந்த ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.