இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூட்டான் நாட்டின் உயரிய விருது வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
பூட்டானின் 114 ஆவது தேசிய தினம் அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடிக்கு ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ என்கிற உயரிய விருதை அளிப்பதாக பூட்டான் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள பூட்டான் பிரதமர், லோடே ஷேரிங் இந்திய பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்த உயரிய விருதுக்கு தகுதியானவர் பிரதமர் மோடி எனவும், மிகவும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராகவும் மோடி இருப்பதாக பூட்டான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பூட்டான் மக்களின் வாழ்த்துக்களோடு, இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு நேரில் வழங்கி கொண்டாட காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தொடரும் நட்பும் ஆதரவும் இன்றுவரை நீடித்து வருவதாக பூட்டான் பிரதமர் கூறியுள்ளார்.
அதேபோல் கொரோனா தொற்றின் போது பிரதமர் மோடியின் நிபந்தனையற்ற உதவிகள் முக்கியமானது என அவரைப்பற்றி புகழ்ந்திருக்கிறார் பூட்டான் பிரதமர்.
Overjoyed to hear His Majesty pronounce Your Excellency Modiji’s @narendramodi name for the highest civilian decoration, Order of the Druk Gyalpo.https://t.co/hD3mihCtSv@PMOIndia @Indiainbhutan pic.twitter.com/ru69MpDWlq
— PM Bhutan (@PMBhutan) December 17, 2021