April 30, 2025 11:56:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் இடைக்கால முப்படை தளபதியானார் மனோஜ் முகுந்த் நரவானே

இந்தியாவின் இடைக்கால முப்படை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவ தளபதியாக இருந்த நரவானே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த வாரம் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் தமிழகத்தின் குன்னூரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், பிபின் ராவத் காலமான நிலையில், அந்த இடத்திற்கு முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய முப்படைத் தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதிய முப்படை தளபதி நியமிக்கப்படும் வரை முப்படைகள் குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.