தமிழ் நாட்டில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கே இவ்வாறு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு S என்ற மரபணு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
நைஜீரிய பயணியுடன் சென்னை வந்த ஒருவருக்கும் லேசான அறிகுறி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏற்கனவே 68 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.