
தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சைகள் பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கேப்டன் வருண் சிங் இன்று மரணமடைந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி குன்னூர் அருகே நடந்த இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் முதலில் குன்னூர் வெலிங்டன் இராணுவ மருத்துவமனையிலும் பின்னர், பெங்களூரு இராணுவ மருத்துவமனையிலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
எனினும், சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது.
கேப்டன் வருண் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டிற்கு வருண் சிங் ஆற்றிய பணிகளை இந்தியா மறக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.