November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா வரைவுத் தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு

ஐநா பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான வரைவுத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்த்து வாக்களித்துள்ளன.

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

இந்தத் தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு தெரிவித்து, வாக்களித்துள்ளன.

சீனா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஐநாவின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால், இந்தத் தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐநாவின் 197 நாடுகளும் ஆலோசித்து, தீர்மானிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விடயத்தில் ஐநா பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகள் மட்டும் தீர்மானம் எடுக்க முடியாது என ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று, பருவநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் இந்திய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் ஐநா அவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முடிவு எடுக்கும் அதிகாரம் சில நாடுகளின் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் எனவும் ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி தெரிவித்திருக்கிறார் .

புவி வெப்பமாதலில் அமெரிக்கா, சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த மேற்கத்தேய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் மீது கட்டுப்பாடுகளை திணிக்கக் கூடாது என இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.