இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது தொகுதியான உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்றுள்ளார்.
பிரதமரை அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கு பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன் முதல் கட்டமாக அங்குள்ள முக்கிய புனித தலங்களில் அவர் வழிபாடு நடத்தவுள்ளார்.
முதலில் அங்கிருக்கும் கால பைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிரதமர் தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு செய்துள்ளார்.
பின்னர் காசி விஸ்வாநாதர் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அங்குள்ள மேலும் சில புனித தலங்களில் அவர் தரிசனம் செய்ய உள்ளார்.
மேலும் வாரணாசியில் 339 கோடி மதிப்பில் புதிதாக புனரமைக்கபட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்வுள்ளார்.
காசி விஸ்வநாதர் கோயிலையும், கங்கை நதிக்கரையையும் இணைக்கும் வளாகம் திறந்து வைக்கப்படுகிறது.
இதன் மூலம் புனித தலங்களுக்கு வரும் மக்கள் இலகுவான முறையில் வழிபாடுகளை நடத்த முடியும் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் 14 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாரணாசி நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
माँ गंगा की गोद में उनके स्नेह ने कृतार्थ कर दिया। ऐसा लगा जैसे माँ गंगा की कलकल करती लहरें विश्वनाथ धाम के लिए आशीर्वाद दे रही हैं।
हर हर महादेव।
हर हर गंगे। pic.twitter.com/iBuRImW9Q1
— Narendra Modi (@narendramodi) December 13, 2021